வண்ணத்துப்பூச்சி பூங்கா, சுற்றுலா வளர்ச்சிப் பணி திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்

வண்ணத்துப்பூச்சி பூங்கா, சுற்றுலா வளர்ச்சிப் பணி திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்
Updated on
2 min read

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில், சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 18 கோடியே 95 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஆடவர் விடுதிக் கட்டடம், கல்லணை மற்றும் வைகை அணை சுற்றுலா வளர்ச்சிப் பணிகள், மண்டல கலை பண்பாட்டு மைய வளாகங்கள், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளுக்கான கூடுதல் கட்டடங்கள், கலை பண்பாட்டு இயக்கக இரண்டாம் தளக் கட்டடம், அரசு அருங்காட்சியகத்தில் காட்சியமைப்புடன் கூடிய இருப்பறை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம் - வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக 6.7 ஏக்கர் நிலப் பரப்பளவில், 60 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 6 மீட்டர் உயரத்துடன் கம்பளிப் பூச்சி வடிவில் சூரிய ஒளி உட்புகுந்து தரையில் படும் வகையில் வெண்ணிற மேற்கூரையுடன் கூடிய உள்ளரங்க பாதுகாப்பகம், வண்ணத்துப் பூச்சிகள் வளர்வதற்கேற்ப உள்ள சுற்றுச்சூழலுடன் கூடிய 200 வகை மரம், செடி, கொடிகளுடன் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில் நுட்பவியல் நிறுவனத்தில், 11,237 சதுர அடி கட்டட பரப்பளவில், அறை ஒன்றுக்கு மூவர் வீதம் 60 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 அறைகள் கொண்ட ஆடவர் விடுதிக் கட்டடம்; தஞ்சாவூர் மாவட்டம் - கல்லணையை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 3 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காவேரி ஆறு விளக்கக் கூடம், மீன் காட்சியகம், மேம்படுத்தப்பட்ட பூங்கா, தொலைநோக்கி கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள்;

தேனி மாவட்டம் - வைகை அணையை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 3 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பூங்கா, மீன் காட்சியகம், கழிவறைகள், மின்விளக்கு வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், மிதி படகுகள், இளைப்பாறும் கூடம்; சேலம் மாவட்டம் - தளவாய்பட்டியில், 1 ஏக்கர் நிலப் பரப்பளவில், 1 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மண்டல கலை பண்பாட்டு அலுவலகம், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் ஆகியவற்றை உள்ளடக்கிய சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய வளாகம்;

திருநெல்வேலி மாவட்டம் - பாளையங்கோட்டை வட்டம், குலவணிகபுரத்தில் 21,800 சதுர அடி நிலப் பரப்பளவில், 1 கோடியே 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மண்டல கலை பண்பாட்டு அலுவலகம், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மைய கோயம்புத்தூர் மாவட்டம் - மலுமிச்சம்பட்டியில் 1.06 ஏக்கர் நிலப் பரப்பளவில் 1 கோடியே 89 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கான புதிய கட்டடம்;

தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 6555 சதுர அடி கட்டட பரப்பளவில் 61 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல் தளக் சென்னை - எழும்பூரில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி வளாகத்தில் 5644 சதுர அடி கட்டட பரப்பளவில் 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலை பண்பாட்டு இயக்கக இரண்டாம் தளக் கட்டடம்;

சென்னை – எழும்பூரில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் 2530 சதுர அடி கட்டட பரப்பளவில், 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள காட்சியமைப்புடன் கூடிய இருப்பறை என மொத்தம் 18 கோடியே 95 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான சுற்றுலா துறை, கலை பண்பாட்டுத் துறை மற்றும் அருங்காட்சியகத் துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in