சென்னை சென்று வந்த மதுரை போக்குவரத்துக் கழக மேலாளருக்கு கரோனா

சென்னை சென்று வந்த மதுரை போக்குவரத்துக் கழக மேலாளருக்கு கரோனா
Updated on
1 min read

சென்னை சென்று வந்த மதுரை அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 52 வயது நபர், மதுரை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கிளை மேலாளராக பணிபுரிகிறார். சில தினங்களுக்கு முன்பு, அவர் சென்னை சென்று அங்கிருந்து தனது மகளை காரில் அழைத்து வந்தார்.

தொடர்ந்து தொண்டையில் வலி இருந்ததை அடுத்து, அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது.

இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கும் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பரிசோதனை எடுக்கப்பட்ட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in