Published : 09 Sep 2015 08:32 AM
Last Updated : 09 Sep 2015 08:32 AM

அரசு பொது மருத்துவமனையில் நுண்வழி அறுவை சிகிச்சை அரங்கம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

சென்னை அரசு பொது மருத்துவ மனையில் நுண்வழி அறுவை சிகிச்சைத் துறை (Minimal Access Surgery Department) கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் குடல்வால் அறுவை சிகிச்சை, பித்தப்பை கல் அகற்றுதல், குடலிறக்கம் நோய் அறுவை சிகிச்சை, ஒட்டு அகற்றுதல், கருப்பை நீர் கட்டி அகற்றுதல், லேப்ராஸ்கோப்பி மூலமாக நோய் கண்டறிதல், வேரிக்கோசிஸ் மற்றும் திட உறுப்புகள் நீக்குதல் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இந்த துறையில் முதலமைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கிடைத்த வருவாயை கொண்டு ரூ.50 லட்சம் செலவில் “நுண்வழி அறுவை சிகிச்சை அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புதிதாக அமைக் கப்பட்டுள்ள நுண்வழி அறுவை சிகிச்சை அரங்கத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். டீன் ஆர்.விமலா கூறுகையில், “இந்தியா விலேயே முதல் முறையாக நுண்வழி அறுவைச் சிகிச்சை அரங்கம் திறக்கப் பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை அரங்கத்தில் 2 அதிநவீன லேப்ரோஸ்கோப்பி கருவிகள், 2 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு மேஜைகள் மற்றும் எனர்ஜி கருவிகள், குடல் உள்நோக்கி பார்க்கும் அதிநவீன கருவி போன்ற வசதிகள் உள்ளன. இந்த அனைத்து கருவிகளும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளன.

இந்த அறுவைச் சிகிச்சை அரங்கம் திறக்கப்பட்டுள்ளதால் நுண்வழி அறுவை சிகிச்சை பெறு வதற்கு நோயாளிகள் காத்திருக் கும் நாட்கள் வெகுவாக குறையும்” என்றார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நுண்வழி அறுவை சிகிச்சை துறை பாலாஜி, எம்ஜிஆர் பல்கலை. துணை வேந் தர் சாந்தாராம் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x