மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்
Updated on
1 min read

மலேசியாவில் இருந்து சென் னைக்கு கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை விமான நிலை யத்துக்கு மலேசியாவில் இருந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானம் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட தயாராக இருந்தது. இந் நிலையில் அந்த விமானத் தில் தங்கம் கடத்தி வரப்படுவ தாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் பயணி களிடம் இருந்து கடத்தல் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

பின்னர், விமானத்துக்குள் ஏறி தீவிர சோதனை நடத்தப் பட்டது. அப்போது விமானத்தின் கழிவறையில் ஒரு மறைவிடத்தில் கருப்பு நிற கவரில் சுற்றப்பட்ட ஒரு பார்சல் மறைத்து வைக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது தலா 500 கிராம் எடையில் 10 தங்கக் கட்டிகள் இருந்தன. 5 கிலோ கொண்ட இந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் அந்த விமானம் உள்நாட்டு பயணிகள் கணக்கில் வருவதால் சாதாரண சோதனையில் எளிதாக தப்பித்து தங்கத்தை கடத்தி கொண்டு வந்துவிடுவார்கள். இதை அறிந்த அதிகாரிகள் தற்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in