Published : 09 Jun 2020 06:17 AM
Last Updated : 09 Jun 2020 06:17 AM

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மீண்டும் கவலைக் கிடமாக இருப்பதாக டாக்டர் ரேலா மருத்துவமனை அறிவித்துள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக் கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், தனது தொகுதியில் ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வந்தார். கடந்த 2-ம் தேதி திடீரென்று காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதற்கான மருந்து, மாத்திரை களை எடுத்து வருகிறார். மருத்துவ மனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

மூச்சுத்திணறல் அதிகமான தால் வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 4-ம் தேதி அன்பழ கன் உடல் நிலையில் எந்த முன் னேற்றமும் ஏற்படவில்லை என்ற நிலையில், அடுத்த நாள் அவருக்கு ஆக்சிஜன் தேவையின் அளவு 80 சத வீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைந்து உடல்நிலையில் முன் னேற்றம் ஏற்பட்டது.

முதல்வர் பழனிசாமி தொலை பேசி மூலமாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

தீவிர சிகிச்சையால், ஆக்சி ஜன் தேவையின் அளவு 29 சதவீத மாக குறைந்திருப்பதாகவும் கல் லீரல் செயல்பாடு அதிகரித்திருப்ப தாகவும் தகவல்கள் வெளி யாகின. இந்நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிட மாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாக்டர் ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங் குமரன் கலியமூர்த்தி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 2-ம் தேதி ஜெ.அன்பழக னுக்கு வெண்டிலேட்டர் உதவி யுடன் 80 சதவீத ஆக்சிஜன் செலுத் தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட் டது. அதன்பிறகு அவரது உடல்நிலை யில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு ஆக்சிஜன் அளிக்கப்படும் அளவு குறைந்தது. ஆனால், நேற்று மாலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதயம், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன. ரத்த அழுத் தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வரு கிறது. ஆனாலும், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது" என்று கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x