

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் மற்றொரு மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது.
மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை, கீழடியில் விலங்கின எலும்பு, கொந்தகையில் தனியார் தோட்டத்தில் முதுமக்கள் தாழியில் மண்டை ஓட்டுடன் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள்தாழியில் சிறிய அளவிலான மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பக்கத்தில் உள்ள குழியில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.