நெல்லையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது

நெல்லையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 100 பேர் வரையில் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், சென்னையிலிருந்தும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவோரால் கடந்த ஒரு மாதமாகவே கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த 2 வாரத்துக்குமுன் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 295-ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை 396 ஆக அதிகரித்திருந்தது.

நேற்று முன்தினம் வரையில் மாவட்டத்தில் 386 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அவர்களில் 266 பேர் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களில் 341 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருப்பதாகவும் சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று மேலும் 10 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் வார்டனுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அவரது குடும்பத்தினருக்கும், மேலப்பாளையம் வள்ளுவர் தெருவில் ஒரே வீட்டில் 5 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரில் நாளுக்குநாள் பாதிப்பு அதிகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in