புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு: கவனத்துடன் இருக்க கிரண்பேடி அறிவுறுத்தல்

கிரண்பேடி: கோப்புப்படம்
கிரண்பேடி: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது. வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறப்பையொட்டி மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் 9 பேருக்கு இன்று (ஜூன் 8) கரோனஅ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 52 ஆக உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மக்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோவில், "வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் மால்கள், உணவகங்கள், மருத்துவமனை சிகிச்சை பிரிவுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கவனம் அவசியம். முகக்கவசம் அணியுங்கள். உங்கள் உடல் நலனை பாதுகாப்பதுடன் அடுத்தவர் உடல் நலனை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொருக்கும் உண்டு. இது மிகவும் சவாலான காலம். அனைவரும் மற்றவரின் உடல்நலனை மதித்து பாதுகாப்புடன் நடப்பது அவசியம். கவனத்துடன் இருங்கள் என்பதே எனது வேண்டுகோள்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in