

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ள னர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது.
கே.ரோசய்யா (தமிழக ஆளுநர்):
ஆசிரியர் சமுதாயம் மாணவர்களுக்கு உந்துதலாகவும், முன் மாதிரியாகவும் திகழ வேண்டும். தன்னலமற்ற பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுக்கு நமது நன்றிக் கடனை செலுத்துவோம்.
ஜெயலலிதா (தமிழக முதல்வர்):
அனைவருக்கும் தரமான கல்வியை அளித்திடும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.64 ஆயிரத்து 485 கோடியே 97 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரத்து 843 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. திருச்சி, சென்னையில் தலா ரூ.3 கோடி செலவில் ஆசிரியர் இல்லங்கள் கட்டப்பட்டு வருகின் றன. மாணவர்களுக்கு கல்வி யோடு ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கற்பித்து வரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
கருணாநிதி (திமுக தலைவர்):
1967, 1969-ம் ஆண்டு களில் ஆசிரியர்களுக்கு செயல் படுத்தப்பட்ட திட்டங்களே ஆசிரியர் சமுதாய முன்னேற்றத்துக்கு இன்றும் பயன்பட்டு வருகின்றன. நல்லாசிரியர் விருதுக்கான தொகையை படிப்படியாக உயர்த்தினேன். ஆசிரியர் சமூகத்தை தொடர்ந்து ஆதரிக்கின்ற பாசநெஞ்சோடு ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.
விஜய்காந்த் (தேமுதிக தலைவர்):
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை முன்மாதிரியாகக் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் பணியை பொதுநல சிந்தனையுடன் சிறப்பாக செய்ய வேண்டும்.
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக மாநில தலைவர்):
நாடு முன்னேறுவதற்கு ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம். கற்ற குழந்தைகளை பெற்ற குழந்தைகளை விட மேலாக மதித்து வாழும் ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துகள்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்):
மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்களின் தரமும் எண்ணிக் கையும் உயர வேண்டும். அதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கி றது.
ராமதாஸ் (பாமக நிறுவனர்):
உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியும் ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கூட ஆட்சியாளர்கள் முன் வராத நிலையில், ஆசிரியர்களின் நிலையை உயர்த்த உறுதி ஏற்போம்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):
வருங்கால இந்தியாவை வழி நடத்தவுள்ள மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஆசிரியர்களின் சிறப்பான பணி செவ்வனே தொடர வாழ்த்துகள்.
ஆர்.சரத்குமார் (ச.ம.க. தலைவர்):
ஒரு மனிதனின் வளர்ச்சியில் பெற்றோர்களை அடுத்து ஆசிரி யர்கள்தான் பெரும் பங்கு வகிக் கின்றனர். மனிதனை கல்வி மூலம் முழுமைப்படுத்தும் ஆசிரியர்களுக்கு இனிய வாழ்த்துகள்.
பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர்):
தன்னம்பிக்கை யான ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கி இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல அயராது பாடுபடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் ந.சேதுராமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் ஆசிரியர் தினத்தையொட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.