

கன்னியாகுமரி மாவட்டம் களியக்கா விளை சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் (57) துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருவிதாங் கோட்டைச் சேர்ந்த அப்துல் ஷமீம் (29), கோட்டாறைச் சேர்ந்த தவுபீக் (27) ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் போலீஸார் கைது செய்தனர்.
இருவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பின்னர் காவலில் எடுத்து விசாரித்தபோது, பயங்கரவாத அமைப்பினருடன் இரு வருக்கும் தொடர்பிருப்பதும், எஸ்ஐ வில்சனை கொலை செய்தது போல் பல்வேறு இடங்களில் சதிச்செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததுவும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது.
விசாரணைக்காக 6 பேர் கொண்ட என்ஐஏ போலீஸார் நேற்று தக்கலை வந்தனர்.
முதல்கட்டமாக திரு விதாங்கோட்டில் உள்ள அப்துல் ஷமீமின் வீட்டுக் குச் சென்று அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து களியக்காவிளை சோதனைச் சாவடி, தவுபீக்கின் வீடு உட்பட மாவட்டத்தின் பல பகுதி களுக்கும் சென்று விசாரணை மேற் கொள்கின்றனர்.