

விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
கோவில்பட்டியில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
சேலம் 8 வழிச் சாலைத் திட் டத்தை விவசாயிகள் எதிர்ப்பை மீறி செயல்படுத்த அரசு மும்முரமாக உள்ளது. தற்போது போராட்டம் நடத்த முடியாத காலகட்டத்தை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்றுவது மோசமான முன்னெடுப்பாகும். இதை அரசு நிறுத்த வேண்டும்.
விவசாயிகளின் உணர்வு களைப் புரிந்து கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் செயல் படுகின்றன. விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு எதிர்காலம் குறித்த எந்தவித திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.