

மக்கள் பணியாளர்களுக்கு எதி ராக சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உள் ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கரோனா நோயில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற முதல்வர் ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கிறார். நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பொரு ளாதார மீட்பு முயற்சிகளையும், சிறந்த நிர்வாக நேர்த்தியால் முதல்வரின் அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதைக் கண்டு கதிகலங்கி வரும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடி மறுவாழ்வு பெறும் நோக்கத்தோடு, கீழ்த்தரமான பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைக் கண்டு, தமிழ்நாடு மக்கள் எள்ளி நகையாடுவதை சமூக ஊடகங்களின் நடுநிலையாளர் கருத்துரைகளிலும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
தொலைநோக்குப் பார்வை யோடு எதிர்கால தமிழகத்தின் நலனுக்காக ஏராளமான பணிகளில் முதல்வர் இரவு, பகலாக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண் டிருக்கிறார். அதிமுக அரசின் செயல்திறனையும், நிர்வாக சிறப்பையும், முதல்வர் வீறு கொண்டு எழுந்த வேங்கையாய் பணியாற்றும் சிறப்பை, தாங்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மனம் குமுறுகிறார். மதிமயங்கி பொய்யையும், புரட்டையும் பரப்ப முயற்சிக்கிறார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த அவர் மேற்கொண்டுள்ள அரை வேக்காட்டு முயற்சிகள் நிச்சயம் பலிக்காது.
பொதுமக்களுக்கு இடையூறு
தமிழகத்தில் முதல்வரின் செயல்திறனாலும், விஸ்வரூப வளர்ச்சியாலும், தமிழக மக் களின் ஏகோபித்த ஆதரவை மு.க.ஸ்டாலின் பெற இயலாமல், முதல்வரின் செயல்பாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல், எதிர்க்க இயலாத நிலையில் தமிழகத்தின் நலன்களை புறக்கணித்து, கோவை மாவட்ட அளவில் போராட்டம் நடத்திட 5 மணி நேரம் திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோ சனை செய்து, மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேரிடர் காலத்திலும், சாதாரண எளி யோனான என்னை எதிர்த்து போராட்டங்களைத் தூண்டி விடுவ து, வேடிக்கையாகவும், விந்தை யாகவும் இருக்கிறது.
சரிந்து கொண்டிருக்கும் தன் அரசியல் செல்வாக்கை கரோனா மூலமாக சரிக்கட்டலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.