கரோனாவால் கூடை பின்னும் வழக்கறிஞர்

கூடை பின்னும் உத்தமகுமரன்.
கூடை பின்னும் உத்தமகுமரன்.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் உத்தமகுமரன்(34). பழங்குடி குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு சிரமங்களுக்கிடையே படித்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும், தன் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வேலை இல்லாததால், தங்களின் பாரம்பரிய தொழிலான கூடை பின்னும் தொழிலை உத்தமகுமரன் தற்போது செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். தற்போது, ஊரடங்கால் நீதிமன்ற வழக்குகள் ஏதும் இல்லாததால், என்னைப் போன்றோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது வாழ்வாதாரத்துக்காக ஆற்றுப்பகுதிக்குச் சென்று ஈச்சங்கோரைகளை வெட்டி வந்து, கூடை முடையும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் இன மக்கள் கூடை முடைவதையும், அம்மிக்கல் கொத்துவதையும் தொழிலாக செய்துவந்த நிலையில், தற்போது கூடைகளை விற்க சந்தை இல்லாததால் பசியும், பட்டினியுமாக அவதிப்பட்டு வருகின்றனர். உதவிக்கு யாரை அணுகுவது என்ற விழிப்புணர்வும் இல்லாததால், எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த அளவே உள்ள எங்கள் இன மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in