புதுச்சேரியில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு: உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி

புதுச்சேரியில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு: உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று முதல் கோயில்கள், மசூதிகள், தேவால யங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ‘ஷாப்பிங் மால்கள்' திறக்கப்படுகின்றன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், விடுதிகளில் தங்கவும் அனுமதி தரப்படுகிறது.

கரோனா ஊரடங்கில் படிப் படியாக தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி ஆட்சியரும் அரசு செயலருமான அருண் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மதவழிபாடு இடங்களுக்கு செல்லும்போது முக்கியமாக பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். கை, கால்களை சோப்பு போட்டு நன்கு சுத்தமாக கழுவிய பின்னரே தரிசனத்துக்கு வர வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல், உடல் நலக் குறைவு உள்ளோர், 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பக்தர்களின் நலன் கருதி வழிபாட்டு தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். துப்புதல், தும்முதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலவர் மற்றும் உற்சவர் தரி சனத்துக்கு மட்டுமே கோயில்களின் நடை திறக்கப்படுகிறது. தீபாரா தனை, அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம், இதர பூஜைகள், உற்சவங்கள், திருமணம் ஆகியவை நடக்காது. நான்கு கால பூஜைகள் பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறின்றி நடத்தப்படும். பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், பூ, தீர்த்தம், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட மாட்டாது. தரிசனத்துக்கு பிறகு கோயில் உட்புறமோ, வெளியிலோ 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடி பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். கோயிலில் யாராவது நோயில் பாதிக்கப்பட்டிருப்பதாக அச்சமாக உணர்ந்தால் உடனே தகவல் தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்களும் இன்று திறப்பு

அதேபோல உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி தரப் படுகிறது. 50 சதவீத இருக்கைகள் வரை அனுமதிக்கலாம். தங்கும் விடுதிகளில் தங்குவோரின் பயண விவரம் உட்பட அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்றும் தெரிவிக்க வேண்டும்.

‘ஷாப்பிங் மால்கள்' இன்று திறக்கப்படுகின்றன. ஏசி அளவு தொடங்கி எவ்வளவு பேர் வரை அனுமதிக்கலாம் என்ற விரிவான உத்தரவு தரப்பட்டுள்ளது. மருத்து வமனைகளில் இதர செயல்படாத பிரிவுகளையும் இயக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in