Published : 08 Jun 2020 06:40 AM
Last Updated : 08 Jun 2020 06:40 AM

மனவளர்ச்சி குன்றிய இருவருக்கும் உதவித் தொகைக்கான ஆணை

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியில் வசிக்கும் பச்சையம்மாள்(62) என்பவர் மனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, ரேஷன் அட்டை ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் 5-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது.

கடந்த மே 17-ம் தேதியே இவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், செய்தியும் வெளியானதால் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று மனநலம் பாதித்த 2 பேருக்கும் மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினர். அவர்களுக்கு தேவையான உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன. இவர்கள் பெயரை ரேஷன் அட்டையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அமமுக சார்பிலும் உதவி

இச்செய்தியை பார்த்த அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனின் உத்தரவின்பேரில் அக்குடும்பத்துக்கு உதவிப் பொருட்களை வழங்க அமமுக மாவட்டச் செயலர் மொளச்சூர் பெருமாள் பரிந்துரை செய்தார். இதன்படி கட்சியின் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியச் செயலர் வேளியூர் தனசேகரன் ஒரு மாதத்துக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்கினார். அப்போது இணைச் செயலாளர் கோவிந்தவாடி பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் சதீஷ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x