Last Updated : 07 Jun, 2020 01:28 PM

 

Published : 07 Jun 2020 01:28 PM
Last Updated : 07 Jun 2020 01:28 PM

கோடையை சமாளிக்க விலங்குகளுக்கு பழ கூட்டு- கரோனாவை எதிர்கொள்ள சத்து மாத்திரை, டானிக்

கரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள புதுச்சேரி வனத்துறை அலுவலகத்திலுள்ள விலங்குகளுக்கு சத்து மாத்திரை, டானிக் தரப்படுகின்றன. தொடர்ந்து அவை நல்ல உடல் நிலையில் இருக்கவும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க தரப்படும் பழ, காய்கறி கூட்டை ருசித்து உண்கின்றன.

புதுச்சேரி-கடலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு மான், குரங்கு, மயில், கிளி, மலை பாம்பு உள்ளிட்ட விலங்குகள், பிளமிங்கோ பறவைகள் உள்ளன. முக்கியமாக புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படும் பறவைகள், விலங்குகளும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. இது கரோனா காலம் என்பதால் விலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வனத்துறை துணை இயக்குநர் குமாரவேல் கூறுகையில், "விலங்குகளுக்கு கரோனா தொற்று இல்லை. பரிசோதித்து உறுதி செய்துள்ளோம். இங்குள்ள மான்கள் சில நாட்களுக்கு முன்பு 3 குட்டிகள் போட்டுள்ளன. நன்றாக உள்ளன. கரோனா தாக்காமல் இருக்க சத்து மாத்திரை மற்றும் சத்து டானிக் ஆகியவற்றை தண்ணீர் தொட்டியில் கலந்து பிராணிகளுக்கு தருகிறோம். கரோனாவிலிருந்து தற்காத்து கொள்ளவும், நல்ல நிலையில் இருக்கவும் இவை உதவுகிறது.

கோடை வெயிலை தாண்டியும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் காலை, மாலை இருவேளை தண்ணீர் தெளிக்கிறோம். குறிப்பாக தர்பூசணி, கிர்ணி பழம், உருளை, கேரட், பீட்ரூட், வெள்ளறி வெட்டி பழம்-காய்கறி கூட்டு மற்றும் கீரைகள் தரப்படுகிறது. அவற்றை ருசித்து விலங்குகள் சாப்பிடும். குறிப்பாக மலைபாம்பு, பிளமிங்கோ பறவைக்கு தண்ணீர் தெளிப்பது வழக்கம் என்று குறிப்பிட்டனர்.

தண்ணீர் தெளிக்க தொடங்கியவுடன் பிளமிங்கோ நடனமாடுவதையும், மலைபாம்பு தண்ணீரில் அமிழ்ந்து நீரை குடித்து மிதக்கிறது. கூண்டுக்குள் அடைப்பட்டு வாழும் சூழலிலும் தங்கள் இருப்பை இயற்கையோடு ரசித்து வாழ மனிதர்களுக்கு கற்று தருகின்றன இப்பிராணிகள். ஆனால் நாம் கற்கிறோமா என்பது கேள்விக்குறிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x