

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கன மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கோட்டாறு உட்பட மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் இடிந்து விழுந்தன.
இரணியலில் அதிகபட்சமாக 88 மி.மீ. மழை பெய்தது. மழை அளவு (மி.மீ.ல்) விவரம்:
மயிலாடி-64, தக்கலை-54, குழித்துறை-42, சிற்றாறு ஒன்று-40, சிற்றாறு இரண்டு-32, பாலமோர்-30, மாம்பழத்துறையாறு-77, கோழிப்போர்விளை-70, முள்ளங்கினாவிளை-78, ஆனைக் கிடங்கு-83.
48 அடி உயர நீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 966 கன அடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 38.40 அடியாக உயர்ந்துள்ளது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணைக்கு 617 கன அடி தண் ணீர் வருகிறது. நீர்மட்டம் 47.15 அடியாக உயர்ந்துள்ளது. சிற்றாறு அணைகளில் நீர்மட்டம் 14 அடியைக் கடந்துள்ளது. நாகர் கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 3.7 அடியாக உயர்ந்துள்ளது.