திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரத்தில் இரு வேறு நிலைப்பாட்டில் வியாபாரிகள்

திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரத்தில் இரு வேறு நிலைப்பாட்டில் வியாபாரிகள்
Updated on
1 min read

திருச்சியில் மூடப்பட்டுள்ள காந்தி மார்க்கெட் விவகாரத்தில் வியாபாரிகளிடையே இரு வேறு நிலைப்பாடு உள்ளதால் பொதுமக்களி டையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது காய்கறி மொத்த விற்பனை சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்திலும், சில்லறை விற்பனை சந்தைகள் மாநகரில் 10 இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, அண்மையில் இரு முறை மழை பெய்ததில் ஜி கார்னர் மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் வைத்திருந்த காய்கறிகள் நனைந்து வீணாகின.

இதனால், வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ள நிலையில், காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டும். இல்லையெனில், ஜூன் 7-ம் தேதி(இன்று) இரவு முதல் காய்கறி மொத்த விற் பனையை காலவரையின்றி நிறுத்திவிடுவோம் என்றும் வியாபாரி களில் ஒரு தரப்பினர் வலி யுறுத்தி வருகின்றனர். மற் றொரு தரப்பினரோ, மாவட்ட நிர்வாகம் காந்தி மார்க்கெட்டை திறக்கும் வரை ஜி கார்னர் மைதானத்திலேயே தொடர்ந்து விற்பனையில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால், காய்கறி மொத்த விற்பனை நடைபெறுமா, இல்லையா என்று சிறு வியாபாரிகள், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.கோவிந்தராஜூலு கூறியது:

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை தளர்த்தப் பட்டுள்ளதால், காந்தி மார்க் கெட்டையும் திறக்க வேண்டும். இல்லையெனில், ஜூன் 7-ம் தேதி இரவு முதல் ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்று வரும் காய்கறி மொத்த விற்பனையை காலவரையின்றி நிறுத்திவிடுவோம். இந்தப் போராட்டத்துக்கு காந்தி மார்க் கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித் துள்ளன என்றார்.

இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.பாபு, “கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கில் அரசின் உத்தரவு வரும் வரை ஜி கார்னர் மைதானத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்வோம். இந்த நிலைப் பாட்டில்தான் ஏராளமான வியா பாரிகள் உள்ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in