Last Updated : 06 Jun, 2020 07:08 PM

 

Published : 06 Jun 2020 07:08 PM
Last Updated : 06 Jun 2020 07:08 PM

முதல்வர் முயற்சியால் தொழில் துறையில் தமிழகம் புதிய சகாப்தம் படைக்கும்: அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை

திருமங்கலம் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மதுரை 

ஊரடங்கு நேரத்திலும் முதல்வரின் பல்வேறு முயற்சியால் தொழில்துறையில் தமிழகம் புதிய சகாப்தம் படைக்கும் என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை திருமங்கலம் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் இன்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கப்பலூர் தொழிற்பேட்டையிலும் அவர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் கூறியது:

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் தனிக் கவனம் செலுத்துகிறார். சிவப்புக் கம்பளம் விரித்து முதலீட்டாளர்களை வரவேற்கிறார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் 27 சதவீத பங்கு வகிக்கும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. முதல்வரின் சீரிய நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீட்டாளர்களுக்கு அரணாக இருந்து, முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, அவர்கள் நினைத்த நேரத்தில் சந்திக்க வாய்ப்பளித்து தேவையான அறிவுரைகளை கூறுகிறார்.

தமிழகம் தொழில்துறையின் மேம்பட, கரோனா தடுப்பு ஊரங்கிலும், இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து ‘ஒளிரும் தமிழகம்’ என்ற வழிகாட்டு நிகழ்வை உருவாக்கி, காணொலியில் முதல்வர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் 500க் கும் மேற்பட்டதொழில் நிறுவனஅதிகாரிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதன் மூலம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாகி, பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் இளைய சமுதாயத்திற்கு புதிய விடியலாக செயல்படுகிறார்.

தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை குழப்பமின்றி அறிவித் ததால் முதலீட்டாளர்களே முதல்வரை பாராட்டுகின்றனர்.

மேலும், முதலீட்டாளர்ளுக்குப் போதிய ஊக்கம், உதவிகளை நினைத்த நேரத்தில் கிடைக்கும் வகையில் முதல்வரின் செயல்பாடுகள் அமைவதால் தொழில்துறையில் தமிழகம் புதிய சகாப்தம் படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x