குமரியில் வங்கி மேலாளர் உட்பட மேலும் 7 பேருக்கு கரோனா:  சென்னை, மும்பை என வெளியூர்களில் இருந்து வருவோர் மூலம் தொற்று அதிகரிப்பு

குமரியில் வங்கி மேலாளர் உட்பட மேலும் 7 பேருக்கு கரோனா:  சென்னை, மும்பை என வெளியூர்களில் இருந்து வருவோர் மூலம் தொற்று அதிகரிப்பு
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மும்முரமாக நடந்து வரும் நிலையில் சென்னை, மும்பை உட்பட வெளியூர்களில் இருந்து வருவோர் மூலம் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி குமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியூர்களில் இருந்து வந்த வண்ணம் உளளனர். ஏற்கெனவே 91 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில் மேலும் 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த வாலிபர் பெங்களூருவில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து காரில் நாகர்கோவிலை வந்தடைந்தார்.

அவரை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் சென்னையில் இருந்து வந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த இரு வாலிபர்களுக்கு பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் மும்பையில் இருந்து வந்த குமரி மாவட்த்தைச் சேர்ந்த 4 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இ

வர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 98 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in