

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 15 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகேஷ்வரன், சிவனேஷ்வரன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார், மற்றொரு மகேஷ்வரன் ஆகிய 5 பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதால் 5 பேரும் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட க்யூ பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, இதே முகாமில் உள்ள யுகப்பிரியன் (26), தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.