மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் தங்கமணி தகவல்

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் தங்கமணி தகவல்
Updated on
1 min read

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவல் வெளியிட்டுள்ளார், என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

இதுகுறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மின்வாரியம் மூலம் தரமான மின்கம்பங்கள் நடப்படுகிறது. கம்பம் தரமில்லை என்பது தவறான தகவல். மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. 4 மாதத்துக்குரிய மின் பயன்பாட்டை கணக்கிட்டு இரு மாதங்களுக்கு உண்டான யூனிட்டாக பிரித்து அனுப்புகிறோம்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவல் வெளியிட்டுள்ளார். நடிகர் பிரசன்னாவைப் பொறுத்தவரை ஊரடங்கு காலத்தில் 6,920 யூனிட் பயன்படுத்தியுள்ளார்.

இதை இரண்டாக பிரித்து கணக்கிட்டதில் கிட்டதட்ட ரூ.42 ஆயிரம் அவர் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் ரூ.13 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தவில்லை. இதையும் சேர்த்து செலுத்த வேண்டும் என கூறியிருந்தோம். அதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in