4.29 லட்சம் முகக்கவசங்கள் கையிருப்பு- சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை குறைப்பு: ரூ.5-க்கு பெற்றுப் பயனடைய அழைப்பு

4.29 லட்சம் முகக்கவசங்கள் கையிருப்பு- சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை குறைப்பு: ரூ.5-க்கு பெற்றுப் பயனடைய அழைப்பு
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசத் தின் விலை ரூ.10-ல் இருந்து ரூ.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் (மாஸ்க்) அணி யத் தொடங்கியுள்ளனர். இதனால் இதன் தேவை அதிகரித்துள்ளது. எனவே, முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும், குறைந்த விலையில் பொது மக்களுக்கு அளிப்பதற்காகவும் புழல்-1, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய இடங்களிலுள்ள மத்திய சிறைகளில் கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிக் கப்பட்டு தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன்கருதி ஒரு முகக்கவசத்தின் விலை தற்போது ரூ.5 எனக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத் துறை தலைமையிட டி.ஐ.ஜி (பொ) முருகேசனிடம் கேட்டபோது, “புழல் சிறையில் 50,075, வேலூர் சிறையில் 15,130, கடலூர் சிறையில் 24,500, திருச்சி சிறையில் 51,100, மதுரை சிறையில் 58,600, பாளையங்கோட்டை சிறையில் 34,750, கோவை சிறையில் 1,95,499 என மொத்தம் 4,29,654 முகக்கவசங்கள் தற்போது கையிருப்பில் உள்ளன.

முகக்கவசம் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரூ.10-க்கு விற்கப்பட்ட முகக்கவசத் தின் விலையை பொதுமக்களின் நலன்கருதி பாதிக்குப் பாதியாக குறைத்து ரூ.5-க்கு விற்பனை செய்து வருகிறோம்.

அரசு மற்றும் தனியார் அலுவல கங்கள், தொழிற்சாலைகள், தனி நபர்கள் உள்ளிட்டோர் அந்தந்த பகுதிகளிலுள்ள மத்திய சிறை நிர்வாகத்தை அணுகி, தங்களுக்குத் தேவையான அளவு முகக்கவசங்களை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக மேலும் விவர மறிய 044-26590615 (புழல் சிறை), 0416-2233472 (வேலூர் சிறை), 04142-235027(கடலூர் சிறை), 0431-2333213 (திருச்சி சிறை), 0452-2360301(மதுரை சிறை), 0462- 2531845(பாளையங்கோட்டை சிறை), 0422-2303062(கோவை சிறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in