Published : 05 Jun 2020 06:54 PM
Last Updated : 05 Jun 2020 06:54 PM

சென்னையில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; 5 அமைச்சர்கள் தலைமையில் குழு அமைப்பு

சென்னையில் அதிகரிக்கும் கரோனா பரவலைத் தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்வர் பழனிசாமி அமைத்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தமிழக அளவில் சென்னையில் மட்டும் 65 சதவீதத் தொற்று உள்ளது. குறிப்பாக 5 மண்டலங்கள் 1000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளன. பல மண்டலங்கள் 2000 என்கிற எண்ணிக்கையை அடைந்துள்ளன.

சென்னையின் நோய்த்தொற்று எண்ணிக்கையைக் குறைக்க 12 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு, மூன்றாகப் பிரித்து மூன்று மண்டலங்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு, கரோனா சிறப்பு அதிகாரியாக முன்னாள் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நியமனம் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. முன்னணிப் பணியில் உள்ள காவலர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் 400 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. செவிலியர் ஒருவர் உயிரிழந்தார். பல மருத்துவர்கள், செவிலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கையில் சென்னையின் மொத்த இறப்பு எண்ணிக்கை 70 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில் சென்னையின் கரோனா பகுதிகளைக் கண்காணிக்க 5 அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆ‌ர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், உதயகுமார் மற்றும் காமராஜ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் முறையே மூன்று மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் பொறுப்பு வகிப்பார்.

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்கள்:

அமைச்சர் ஜெயக்குமார் மண்டலம் - 3, 4, 5 .

அமைச்சர் எம்.ஆ‌ர்.விஜயபாஸ்கர் மண்டலம்- 7, 11, 12 .

அமைச்சர் கே.பி.அன்பழகன் மண்டலம் - 13, 14, 15.

அமைச்சர் உதயகுமார் மண்டலம்- 1, 2, 6.

அமைச்சர் காமராஜ் மண்டலம்- 8, 9, 10.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x