

தாம்பரத்தில் கொலை முயற்சி வழக்கில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாம்பரம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பைக்கில் செல்லும்போது ஏற்பட்ட தகராறில் இரண்டு இளைஞர் கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 8 மாணவர்களை தாம்பரம் போலீஸார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். 3 சிறுவர்களை கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் 5 மாணவர்களை புழல் சிறையிலும் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களை போலீஸார் தாக்கியதாகவும் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாகவும் இதற்கு காரணமான தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் தமுமுக சார்பில் தாம்பரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.