

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 96 பேர் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தென்காசியைச் சேர்ந்த 39 வயது ஆண், கடையநல்லூர் அருகே உள்ள கோவிலாண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக தொற்று கண்டறியப்பட்ட கோவிலாண்டனூரைச் சேர்ந்தவர் சென்னையில் இருந்து வந்தவர். தென்காசியைச் சேர்ந்தவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரையும் சேர்த்து தற்போது 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.