கரோனா பரிசோதனை முடிந்த பிறகும் 5 மணி நேரம் காக்க வைத்ததால் மறியல்

கரோனா பரிசோதனை முடிந்த பிறகும் 5 மணி நேரம் காக்க வைத்ததால் மறியல்
Updated on
1 min read

ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் நீண்டநேரம் காத்திருக்க வைத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.

சென்னை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் மாலை வாகனங்களில் குமரி மாவட்டம் வந்த 52 பேரிடம் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களின் சளி, ரத்த மாதிரிகள் பெறப்பட்டு தனிமைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

ஆனால், நள்ளிரவு 12 மணி ஆன பின்னரும் அவர்களை தனிமைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்ல அதிகாரிகள் யாரும் வரவில்லை. 5 மணி நேரத்துக்கும் மேல் சோதனைச் சாவடியில் உணவின்றித் தவித்ததால் ஆத்திரமடைந்த பயணிகள் சாலையில் அமர்ந்து மறியல் செய் தனர். தகவலறிந்த ஆரல்வாய் மொழி போலீஸார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பயணிகளை அவரவர் வீடுகளுக்கே சென்று தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in