Published : 05 Jun 2020 06:58 AM
Last Updated : 05 Jun 2020 06:58 AM

இந்தியா – ஆஸ்திரேலியா உச்சி மாநாடு; நரேந்திர மோடி - ஸ்காட் மோரிசன் காணொலி காட்சியில் பேச்சுவார்த்தை- 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் காணொலி காட்சி மூலம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். படம்: பிடிஐ

புதுடெல்லி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் காணொலி காட்சி மூலம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாட்டு ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கடந்த ஜனவரியில் இந்தியா வருவதற்கு திட்டமிட்டி ருந்தார். ஆனால், அந்த நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அவ ரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பயணத் திட்டம் தள்ளிப் போனது.

இந்நிலையில், இரு நாடுகளின் உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நேற்று நடத்தப்பட்டது. இரு நாட்டு பிரதமர்களும் காணொலி யிலேயே பேச்சுவார்த்தை நடத் தினர். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதற்கு இதுவே மிகச் சரியான தருணம். நமது நட்புறவால் இரு நாடு களுக்கு மட்டுமல்ல, இந்திய, பசிபிக் பிராந்தியத்துக்கும் ஒட்டு மொத்த உலகத்துக்கும் பயன் கிடைக்கும். கரோனா வைரஸால் உலகம் முழுவதும் சமூக, பொரு ளாதார ரீதியில் பெரும் பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளன. இதை எதிர் கொள்ள உலக நாடுகள் ஒன் றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசியதாவது:

ஆஸ்திரேலியா - இந்தியா இடை யிலான நட்புறவு ஆழமானது. இயற்கையாகவே இரு நாடு களும் ஒருமித்த கருத்துகளை கொண்டுள்ளன. நமது பிராந்தி யத்தின் நன்மைக்காக இரு நாடு களும் இணைந்து செயல்பட வேண்டும். சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்து ழைப்பை வலுப்படுத்த வேண்டும். இருநாட்டு வர்த்தக உறவு அதி வேகமாக வளர்ந்து வருகிறது.

இனிவரும் காலத்தில் இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பு முக்கிய மானதாக இருக்கும். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட நண்பர்கள் நம்மோடு உள்ளனர்.

இவ்வாறு ஆஸ்திரேலிய பிரத மர் மோரிசன் பேசினார்.

சமோசா நகைச்சுவை

ஸ்காட் மோரிசன் சில நாட் களுக்கு முன்பு ட்விட்டரில் வெளி யிட்ட பதிவில், ‘சமோசா, மாம்பழ சட்னியை நானே தயாரித்துள் ளேன். இவற்றை பிரதமர் மோடி யுடன் பகிர்ந்து கொள்ள முடியாதது வருத்தமாக இருக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் நேற்று பேசும்போது, ‘‘அடுத்த முறை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்போது நான் தயாரிக்கும் சமோசாக்களை அவருடன் பகிர்ந்து கொள்வேன். குஜராத் கிச்சடியை நானே தயார் செய்து பிரதமர் மோடிக்கு அளிப்பேன். ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தும் மோடியின் பண்பு அனைவரும் அறிந்தது. இதற்காகவே இந்தியா வருவேன்’’ என்றார்.

ஆஸ்திரேலிய பிரதமரின் நகைச்சுவையான பேச்சால் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மனம் விட்டு சிரித்தனர். பிரதமர் மோடி கூறும்போது, ‘‘உங்களது சமோசா இந்தியாவில் பிரபலமாகி விட்டது. உங்களது கிச்சடியை ருசிக்கவும் காத்திருக்கிறேன்’’ என்றார்.

சீனாவுக்கு எச்சரிக்கை

உச்சி மாநாட்டின்போது இந் தியா - ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. குறிப்பாக இரு நாட்டு ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகி உள் ளது. இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. கடலுக்கு அடியில் சீனாவின் ஆளில்லா சிறிய ரக நீர்மூழ்கிகள் சுற்றித் திரிவது கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. அவற்றை ஆஸ்திரேலிய கடற்படை கண்டு பிடித்து முழுமையாக அழித்துள் ளது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்த அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த 4 நாடுகளும் இணைந்து இந்திய, பசிபிக் கடல் பகுதிகளில் அவ்வப்போது போர் ஒத்திகை நடத்தி வருகின்றன. வரும் ஜூலை அல்லது ஆகஸ்டில் ஜப்பான் கடல் எல்லை பகுதியில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x