கரோனாவால் விலகியிருக்கச் சொன்னால் ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்கிறார்: மதுரை முன்னாள் மேயர் குற்றச்சாட்டு 

கரோனாவால் விலகியிருக்கச் சொன்னால் ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்கிறார்: மதுரை முன்னாள் மேயர் குற்றச்சாட்டு 
Updated on
1 min read

உலகமே கரோனாவை வெல்ல விலகியிருக்கச் சொன்னால் ஸ்டாலின் 'ஒன்றிணைவோம் வா' என்று மக்களை அழைப்பதாக முன்னாள் மேயரும், வடக்குத் தொகுதி எம்எல்ஏவுமான விவி.ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை வடக்குத் தொகுதியில் உள்ள புதூரில் 1000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிவாரணத் தொகுப்புகளை வி.வி ராஜன் செல்லப்பா வழங்கிப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:
’’தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அளவில் நிவாரணப் பொருட்களை முதல்வர் வழங்கி வருகிறார். கரோனா நோயினைக் கட்டுப்படுத்தும் களத்தில் தமிழக முதல்வர் இறங்கி நல்ல சூழலை உருவாக்கி இருக்கிறார்.

ஆனால், திமுக மாயையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா மட்டுமில்லை, உலகமே கரோனாவை வெல்ல விழித்திரு, தனித்திரு, வீட்டில் இரு, என்று விலகியிருக்கச் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் ஸ்டாலினும், திமுகவினரும் அரசுக்கு கெட்ட பேர் ஏற்படுத்தும் நோக்கில் 'ஒன்றிணைவோம் வா' என்று நோய்ப் பரவலுக்கு மக்களை அழைக்கிறார்கள்.

திமுகவின் செயல்பாடுகளுக்கும், அதன் கொள்கைக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அதிமுக அரசுக்கு எதிராக திமுக எடுக்கின்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுக் கொண்டு வருகின்றன’’.

இவ்வாறு ராஜன் செல்லப்பா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in