

சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (48). இவர் சினிமா படப்பிடிப்பு நடத்தப் போவதாகக் கூறி தேவகோட்டையைச் சேர்ந்த சத்திரத்தார் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்தார்.
பின்னர், சில நாட்களில் பெரியசாமி வாடகைக்கு எடுத்த வீட்டை தனது வீடு என்றும், தான் ஜமீன் பரம்பரை என்றும் கூறி வந்தார். மேலும் ஊரடங்கால் தொழில் முடக்கம் அடைந்தோருக்கு சொத் துப் பத்திரம் மூலம் கடன் கொடுப் பதாகத் தெரிவித்தார். இதை நம்பிய, புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த நாகராஜனிடம் ரூ.5 கோடிகடன் தருவதாகக் கூறினார். இதற்காக முன் பணம் ரூ.2 லட்சம், 6 பூர்த்தி செய்யப்படாத காசோலைகளை நாகராஜனிடம் இருந்து பெரியசாமி பெற்றார்.
ஆனால் பணம் வாங்கிய அன்றிரவே வீட்டைக் காலி செய்துவிட்டு தனதுநண்பர்களுடன் பெரியசாமி தலைமறைவானார். இதுகுறித்து சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதனிடம் நாகராஜன் புகார் கொடுத்தார். கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பெரியசாமி, அவருடன் இருந்த சுந்தர பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்து கார், பணத்தை பறிமுதல் செய்தனர்.