

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தேனியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்காலிகமாக உப்பார்பட்டி தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தப்புக்குண்டு கிராமத்தில் கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான கட்டுமானப் பணி தொடக்க விழா நேற்று நடை பெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்தார்.
ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் , தேனி எம்.பி. ப. ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பணிகளைத் தொடங்கி வைத்தார். 12 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி வளாகமும், 2 ஏக்கரில் மாணவர் விடுதியும் ரூ. 89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன.
தரை மற்றும் இரு தளங்கள் 26 வகுப்பறைகள், கருத்தரங்கக் கூடம், காணொலிக் காட்சி அறை, கணினி ஆய்வகம், உள் விளை யாட்டரங்கம், சர்வதேச மாதிரி நீதிமன்றம் உள்ளிட்டவை அமைய உள்ளன. சென்னை சட்டக்கல்வி இயக்குநர் நா. சந்தோஷ்குமார், எம்எல்ஏக்கள் எஸ்டிகே. ஜக்கையன், பி. நீதிபதி, எஸ்.பி. இ. சாய்சரண் தேஜஸ்வி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.