கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துக: தங்கம் தென்னரசு

கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துக: தங்கம் தென்னரசு
Updated on
1 min read

கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துக என முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், "நாளுக்கு நாள் கரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்பதரை லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தற்போதைய நிலையில் தேர்வுக்குப் பள்ளிகளை தயார் செய்வதும் மாணவர்கள் தேர்வு எழுத வருவதும் மிகச்சிரமம்

உடனடியாக 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்கு மிகுந்த அச்சத்தை தரக்கூடியதாக இருக்கும்

எனவே, அரசு தீவிரமாக சிந்தித்து கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியானதாக இருக்கும்.

ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் தேவை என்ற நடைமுறை கரோனோ பொதுமுடக்கம் காலத்த்தில் இடம் பெயர்ந்த மாணவர்களின் கல்வியை பாதிக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in