அடுத்த ஆண்டு இதேநாளில் கோட்டையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருப்பார்: இ.பெரியசாமி பேட்டி

திண்டுக்கல்லில் நடந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி.
திண்டுக்கல்லில் நடந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி.
Updated on
1 min read

அடுத்த ஆண்டு இதேநாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் முதல்வராக இருப்பார், என, திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது.

திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக கொறடா அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்..ஏ., ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி., மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அடுத்த ஆண்டு இதேநாளில்

கோட்டையில் முதல்வராக இருப்பார். தமிழக மக்களை காப்பார். என்றென்றும் கழகத்தை வழிநடத்துவார். இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெற்றிய வெற்றியை பெற்று சமர்ப்பிப்பது தான் நமது குறிக்கோளாகஇருக்கவேண்டும் என்பதை இந்த நேரத்தில் தமிழக மக்களையும், கழக தொண்டர்களையும் விரும்பி, வணங்கி கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

தொடர்ந்து ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பட்டி, கன்னிவாடி ஆகிய ஊர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in