மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்த தூய்மை பணியாளர் மரணம்- உடலை வாங்க மறுத்து போராட்டம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை காவல் ஆணையர் அலு வலகத் தூய்மைப் பணியாளர் செல்வம் (50). 2 நாட்களுக்கு முன் இவர் உட்பட 3 பேர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்தனர். அப்போது திடீ ரென மயங்கிய செல்வம் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

செல்வத்தின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு உறவினர்கள் மற்றும் ஆதித் தமிழர் பேரவை யினர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்த முயன்றனர். மதிச்சியம் போலீஸார் அவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். செல்வத்தின் மகன் மணிகண்டன் (23) கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஆதித்தமிழர் பேரவை செயலர் ஆதவன் கூறுகையில், போலீஸ் குடியிருப்பு, காவல் துறை அலுவலகங்களில் குறைந்த சம்பளத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணியில் உள் ளனர். செல்வமும் அதுபோல பணிபுரிந்தார். அவருக்கு மகன், மகள்கள் உள்ளனர். ஏற்கெனவே கரோனா தடுப்பு பணியில் இறந்த விஏஓ உள்ளிட்டோருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அது போன்று செல்வத்தின் குடும்பத்துக்கும் ரூ.50 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in