

தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து, அருவிகளில் நீர் வரத்து ஏற்படும். அதன்படி தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று அவ்வப்போது சாரல் மழை யுடன் குளிர்ந்த காற்று வீசியது.
குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவிகளில் நீர்வரத்து ஏற் பட்டது. கரோனா ஊரடங்கால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத னால், குற்றாலம் களையிழந்து காணப்படுகிறது.
திருக்குற்றாலநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் விஜயலெட்சுமியிடம், கோயில் கடை வாடகைதாரர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், குற்றாலநாதர் கோயிலுக்குச் சொந்தமான காலிமனை, கட்டிடங்களில் 154 பேர் கடை வைத்து வியாபாரம் செய்கிறோம். இயல்பு நிலை திரும்பும் வரை கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.