மகளை கொலை செய்ததாக தந்தை கைது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பன்னீர்(41). இவரது மகள் வித்யா(13), மே 18-ம் தேதி அங்குள்ள யூக்கலிப்டஸ் காட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி மறுநாள் வித்யா உயிரிழந்தார்.
வித்யாவின் தாய் இந்திரா அளித்த புகாரின்பேரில் கந்தர்வக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 8 தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பன்னீர், அவரது உறவினர் குமார் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் கூறியதாவது:
பன்னீருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 3 மகள்கள், 1 மகன். 2-வது மனைவி மூக்காயிக்கு 2 மகள்கள். தனித்தனியே வசித்து வந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர மகள்களில் ஒருவரை பலி கொடுக்குமாறு புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் மருளாளி சி.வசந்தி என்பவர் கூறியுள்ளார். இதையடுத்து, மே 17-ம் தேதி நொடியூரில் உள்ள ஒரு குளத்தில் நள்ளிரவில் பன்னீர், மூக்காயி, உறவினர் பி.குமார்(32), வசந்தி, மின்னாத்தூரைச் சேர்ந்த எம்.முருகாயி ஆகியோர் பூஜை செய்துள்ளனர்.
பின்னர், வசந்தி கூறியபடி மறுநாள் பாப்பாங்குளம் யூக்கலிப் டஸ் காட்டில் வித்யாவை பன்னீர், குமார், மூக்காயி ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்துள்ளனர். அப்போது குமார், மூக்காயி ஆகியோர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
உயிருக்குப் போராடிய வித்யாவை தஞ்சாவூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, எதுவும் தெரியாதது போன்று பன்னீர் இருந்துள்ளார்.
இந்நிலையில் நடந்தது அத்தனையும் விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து பன்னீர், அவரது உறவினர் குமார்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள் ளனர். மற்றவர்கள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என்றார்.
மூக்காயி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
