Published : 02 Jun 2020 06:44 AM
Last Updated : 02 Jun 2020 06:44 AM

பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள்- காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம், திருப்போரூர் அடுத்த பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கான 1000 குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்காக, தமிழக அரசுகடந்த 2010-ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பையனூரில் 96 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதில், பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கர், படப்பிடிப்பு அரங்கத்துக்கு 15 ஏக்கர், தயாரிப்பாளர் சங்கத்துக்கு 10 ஏக்கர், சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கர் மற்றும் பொது பகுதியாக நிலங்கள் பிரிக்கப்பட்டன.

இதையடுத்து, ரூ.9 கோடி மதிப்பில் படப்பிடிப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், சென்னையில் இருந்து முதல்வர் பழனிசாமி கணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். பையனூர் கிராமத்தில்நடந்த நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும்திரைப்பட தொழிலாளர்கள், திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு சங்க நிர்வாகிகள் உள்ளோட்டோர் பங்கேற்று அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

ரூ.500 கோடி இழப்பு

பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து இன்னும் ஒரு வார காலத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு முழு வேகமாக நடக்கத் தொடங்கிவிடும். சின்னத்திரை படப்பிடிப்பைப் போல் சினிமா படப்பிடிப்பை நடத்த முடியாது. ஏனென்றால் சினிமா படப்பிடிப்பை 80 சதவீதம் வெளிப்புறத்தில்தான் நடத்தவேண்டும். சென்னையில் கரோனாநிலவரம் மிகவும் மோசமானதாக இருப்பதால், இப்போது சினிமாபடப்பிடிப்பு நடத்த நாங்களே விருப்பம் தெரிவிக்கவில்லை.

கடந்த 70 நாட்களில் ஊரடங்கால் திரைத்துறை சார்ந்த பல பணிகள் முடங்கியுள்ளன. இதனால், சினிமா மற்றும் திரைப்படத் துறையில் கடந்த 3 மாதங்களில் ரூ.500கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x