Published : 01 Jun 2020 10:51 PM
Last Updated : 01 Jun 2020 10:51 PM

பாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார்.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன் உயிரிழந்தார்.

பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்தநிலையில் இன்று இரவு அவர் மரணமடைந்தார்.

தமிழக பாஜக தலைவராக 2 முறை பொறுப்பு வகித்த கே.என். லட்சுமணன், ஒரு முறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்ப்டடார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x