குமரியில் இன்று பேருந்துகள் இயங்கவில்லை: நாளை முதல் இயக்க ஏற்பாடு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின்பு இன்று பேருந்துகள் இயங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் ஓடவில்லை.

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 12 போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள அரசு பேருந்துகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து இன்று இயக்குவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி சந்தையாக செயல்பட்டு வந்ததால் அவற்றை அகற்றுவதா? அல்லது பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகளை தவிர காலியாக உள்ள இடங்களில் குறைந்த அளவு பேரூந்துகளை நிறுத்தி இயக்குவதா? என்ற குழப்பம் நிலவியது.

இதனால் முறையாக பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடு செய்யவேண்டி இருந்ததால், இன்று குமரியில் பேரூந்துகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் இருந்தும் குமரிக்கு பேருந்துகள் வரவில்லை. பேருந்துகளை குமரியில் இயக்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் பேரூந்துகளை நாளை (2ம் தேதி) முதல் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்ப்பட்டது. இன்று அரசு பேரூந்துகள் ஓடாததால் குமரி மாவட்ட பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in