

சிவகங்கை மாவட்டத்திற்கு மும்பையில் இருந்து வந்த சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 29 வயது பெண் என இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல் சென்னையில் பரிசோதனை செய்துவிட்டு முடிவு அறிவிப்பதற்குள் காளையார்கோவில் வந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்கும், புதுக்கோட்டையில் பணிபுரியும் காரைக்குடியைச் சேர்ந்த உளவுப்பிரிவு காவலருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இருதினங்களுக்கு முன்பு, புதுடெல்லி, சென்னையில் இருந்து வந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 15 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் இன்று மும்பையில் இருந்த வந்த சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
மேலும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த மானாமதுரை அருகே கிளங்காட்டூரைச் சேர்ந்த 29 பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.