Published : 01 Jun 2020 19:21 pm

Updated : 01 Jun 2020 19:22 pm

 

Published : 01 Jun 2020 07:21 PM
Last Updated : 01 Jun 2020 07:22 PM

தூத்துக்குடியில் இருந்து 875 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் பிஹார் பயணம்

tutucorin-875-migrant-workers-sent-to-bihar
சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு காத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 875 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று பிஹார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் தொடர்ந்து, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடியில் இருந்து பீகார் மாநிலம் பாபுதாம் மோத்தாரி ரயில் நிலையத்துக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இந்த ரயில் பாபுதாம் மோத்தாரி ரயில் நிலையத்தை வரும் 4-ம் தேதி காலை 9.5 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயிலில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 538 பிஹார் மாநிலத் தொழிலாளர்களும், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 337 பிஹார் மாநில தொழிலாளர்களும் பயணம் செய்கின்றனர்.

அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனைகளை செய்தனர். மேலும், அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை அதிகாரிகள் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

தூத்துக்குடி875 தொழிலாளர்கள்பிஹார்சிறப்பு ரயிலில் பயணம்One minute news

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author