திண்டுக்கல்லில் அரசுப் பேருந்துகளை தடுத்துநிறுத்திய சுங்கச்சாவடி பணியாளர்கள்: ஒன்றரை மணிநேரம் பயணிகள் தவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால் அனுமதிக்க மறுக்கப்பட்டநிலையில் காத்திருந்த அரசு பேருந்துகள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால் அனுமதிக்க மறுக்கப்பட்டநிலையில் காத்திருந்த அரசு பேருந்துகள்.
Updated on
1 min read

ஊரடங்கு தளர்வை அடுத்து இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளை டோல்கேட்டில் பணம் செலுத்தவில்லை எனப் கூறி டோல்கேட் பணியாளர்கள் தடுத்துநிறுத்தினர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. திண்டுக்கல்லில் இருந்து மதுரை, பழநியில் இருந்து மதுரை, மேலும் மதுரை வழியாக ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் கொடைரோடு அருகேயுள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லவேண்டும்.

இந்நிலையில் காலை திண்டுக்கல், பழநியில் இருந்து சென்ற அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல பணியாளர்கள் அனுமதிக்கவில்லை.

சுங்கச்சாவடிக்கு பணம் செலுத்தாததால் அனுமதிக்கமுடியாது என பேருந்தை நிறுத்தினர். இதனால் தொடர்ந்து செல்லமுடியாத நிலையில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பேருந்து நடத்துனர்கள் தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் அதிகாரிகள் சுங்கச்சாவடி பணியாளர்களிடம் பேசியும் பலனில்லாத நிலையே ஏற்பட்டது. இதனால் ஒன்றரை மணி நேரமாக சுங்கச்சாவடியிலேயே பேருந்துகள் பயணிகளுடன் காத்திருந்தன.

இதையடுத்து அம்மையநாயக்கனூர் போலீஸ் அதிகாரிகள் சுங்கச்சாவடி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளின் எண்களை குறித்துவைத்துக்கொள்ளவும், இதற்கான கட்டணத்தை அரசு போக்குவரத்து கழகத்தினர் செலுத்துவர்.

இந்த இக்காட்டான நிலையில் இதுபோன்று பேருந்துகளை தடுத்து நிறுத்தக்கூடாது என எச்சரித்ததையடுத்து அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றது. இதனால் ஒன்றரை மணிநேரம் சுங்கச்சாவடியிலேயே பேருந்துகள் காத்திருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in