மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ரூ.1000 பஸ் பாஸ் ஜூன் 15 வரை செல்லுபடியாகும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ரூ.1000 பஸ் பாஸ் ஜூன் 15 வரை செல்லுபடியாகும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ரூ.1000 மாதாந்திர சலுகை கட்டண பாஸ் ஜூன் 15 வரை செல்லுபடியாகும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை மண்டலத்தில் ரூ.1000 மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ரூ.ஆயிரம் பாஸ் எடுத்தவர்கள் அதைப் பயன்படுத்தி 16.3.2020 முதல் 15.4.2020 வரை பஸ்களில் பயணம் செய்திருக்க முடியும்.

இதற்கிடையே கரோனா தடுப்பு தொடர்பாக 25.3.2020 முதல் பொதுப் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஜூன் 1 முதல் 50 சதவீத பொது பஸ் சேவை தொடங்கியுள்ளது.

இதனால் ஏற்கெனவே பெற்ற ரூ.ஆயிரம் மாதாந்திர சலுகை கட்டண பாஸை பயன்படுத்தி ஜூன் 15 வரை பஸ்களில் பயணம் செய்யலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பிற்கு பயணிகள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in