Last Updated : 01 Jun, 2020 06:17 PM

 

Published : 01 Jun 2020 06:17 PM
Last Updated : 01 Jun 2020 06:17 PM

நேசமணி நினைவுநாளில் மரியாதை செலுத்த அனுமதி மறுப்பு: மணிமண்டபம் முன்பு அமர்ந்து வசந்தகுமார் எம்.பி. போராட்டம்

நாகர்கோவில்

நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி நினைவு நாளில் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி இல்லாததால் வசந்தகுமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸார் மணிமண்டபம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

தாய் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைய போராடிய மார்ஷல் நேசமணியின் 52-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள நேசமணியின் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் ஊரடங்கு அமலில் இருப்பதால் மணிமண்டபம் பூட்டப்பட்டது.

அதன் பின்னர் வசந்தகுமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸார் நேசமணி சிலைக்கு மாலையணிவிப்பதற்காக வந்தனர். அப்போது நினைவு தினத்தன்று மணிமண்டபம் பூட்டப்பட்டிருப்பதை கண்டித்தும், நேசமணி சிலைக்கு மக்கள் பிரதிநிதிகள் மரியாதை செலுத்துவதற்கு அனுமதிக்காததை கண்டித்தும் மணிமண்டபம் முன்பு வசந்தகுமார் எம்.பி. பிரின்ஸ் எம்.எல்.ஏ., மற்றும் காங்கிரஸார் அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபுட்டனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று நாகர்கோவில் அண்ணா பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தனர். இது குறித்து வசந்தகுமார் எம்.பி. கூறுகையில்; மார்ஷல் நேசமணியின் நினைவு நாளில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் மட்டும் மரியாதை செலுத்திய பின்பு மணிமண்டபத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரதிநிதிகள் யாரும் மரியாதை செலுத்த அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த மெத்தன போக்கை கண்டித்து போராட்டம் நடத்தினோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x