Last Updated : 01 Jun, 2020 02:24 PM

 

Published : 01 Jun 2020 02:24 PM
Last Updated : 01 Jun 2020 02:24 PM

ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வு தமிழரின் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும்: வணிகவரித்துறை இணை ஆணையர் தேவேந்திர பூபதி நம்பிக்கை

ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடைபெறும் ஆகழாய்வு தமிழரின் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக உறுதிபடுத்தும் என, வணிகவரித்துறை இணை ஆணையர் தேவேந்திர பூபதி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், அரசு அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர். நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் ஏற்கனவே அகழாய்வுப் பணிகளைப்பார்வையிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வணிகவரித்துறையின் கூடுதல் ஆணையரும், சென்னை தீர்ப்பாயத்தின் துறை உறுவேந்திர பூப்பினருமான தேபதி ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணிகளை, தனது குழுவினருடன் வந்து பார்வையிட்டார்.

பின்னர் அவர், "ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடைபெறும் அகழாய்வு தமிழரின் முக்கியமான அகழ்வாய்வு. தமிழரின் பண்பாடு, வளர்ச்சி, பரிணாமங்களின் முக்கிய களமாக இதை நான் பார்க்கிறேன்.

ஆதிச்சநல்லூர், சிவகளையில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் தமிழரின் தொன்மையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும். எனவே, இந்த அகழாய்வை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது" என்றார்அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x