

புதுச்சேரியில் ஊரடங்கு நீட் டிப்பது குறித்து நேற்று இரவு அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு புதிய தளர்வுகளை வெளி யிட்டுள்ளது. அதனை புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைப்படுத்த இருக்கிறோம்.
ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும். இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம். ஜூன் 8 ஆம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்களைத் திறக்கலாம். உணவகங்களில் அமர்ந்து உண வருந்தலாம். இரவு 9 மணி வரை தனிமனித இடைவெளியுடன் ஓட்டல்கள், மால்கள் இயங்கும்.
கல்விக் கூடங்கள் திறக்கப்படுமா?
பள்ளி, கல்லூரிகளைத் திறப் பது குறித்து கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளின் நிர்வாகி களுடன் ஆலோசித்து, அதில் தெரிவிக்கப்பட்ட முடிவுகளை மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு தெரிவிக்கும்.
திரையரங்கு, நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள், ஓட்டல் களில் உள்ள பார்கள், ஆடிட் டோரியம் திறக்கப்படாது. மக்கள் நடைபயிற்சிக்காக புதுச்சேரி கடற்கரை சாலை திறக்கப்படும். பாரதி பூங்காவும் திறக்கப்படும். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார்.
ஆட்சியர்களுடன் ஆலோசனை
அத்தியாவசியமின்றி வெளி மாநிலத்தவர் புதுச்சேரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மருத்துவம், விவசாயப் பணி மற்றும் தொழிற்சாலைக்கு வருப வர்கள் உரிய சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள். புதுச்சேரியின் அண்டை மாவட் டங்களான விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இதுபற்றி அதிகாரிகள் கலந்து பேசி, எந்த முறையில் அனுமதிப்பது என முடிவு செய்யப்படும்.
இவ்வாறு முதல்வர் நாராய ணசாமி தெரிவித்தார்.