

திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் விழுப்புரம் ராகவன்பேட்டை, மருதூர் பகுதி களில் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் அளித்த கோரிக்கை களின் மீது திமுகவினரால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா என்று விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ், அதற்கு உறுதுணையாக இருந்த சபரிநாதன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பியிடம் புகார் அளித்துள்ளோம்.
ஒரு வாரம் வரை பொறுத்துப் பார்ப்போம். நடவடிக்கை எடுக்காவிட்டால், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.