Published : 01 Jun 2020 06:57 AM
Last Updated : 01 Jun 2020 06:57 AM

காவல் துறையினருக்கு வேகமாகப் பரவும் கரோனா- உரிய சிகிச்சை, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தல்

சென்னை

கரோனா வைரஸ் தடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு அதிக அளவில் வைரஸ் தொற்று பரவுவதால் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை அதிகாரி கள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் காவல் துறை யினரும் அதிக அளவில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென் னையில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸா ருக்கு கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முதல்நிலை காவலர் முதல் கூடுதல் காவல் ஆணையர் வரை 300-க்கும் மேற் பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட் டுள்ளது. தற்போது, தமிழக காவல் உயர் பயிற்சியகத்தில் பணியாற்றும் ஏ.டி.எஸ்.பி. ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் காவல் நிலையத் தில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அந்த காவல் நிலையம் உடனடியாக கிருமி நாசினி தெளிக் கப்பட்டு மூடப்பட்டது. ஆனால், தற்போது கிருமி நாசினி தெளிப் பதோடு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கமான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் பாதிக்கப்பட்டால் உடனடி நடவடிக்கை, உயர் சிகிச்சை அளிப்பதுபோல், பாதிக் கப்பட்ட காவலர்களுக்கும் உயர் சிகிச்சை, ஓய்வு அளிக்க வேண்டும் என போலீஸார் கோரிக்கை விடுத் துள்ளனர். தொடர் தொற்று காரண மாக அச்சத்துடனேயே பணியாற்று வதாகவும் கூறுகின்றனர்.

எனவே, தேவையான முன்னெச் சரிக்கை மற்றும் மாற்று நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தி வருகின்றனர்.

தீயணைப்பு வீரர்கள்

காவல் துறையினர் மட்டுமின்றி கிருமி நாசினி தெளிக்கும் பணி யில் ஈடுபட்டுள்ள 31 தீயணைப்பு வீரர்களுக்கும் தொற்று ஏற்பட் டுள்ளது. அதில் 11 பேர் குண மடைந்துள்ளனர். மேலும், ரயில்வே போலீஸார், ஆர்.பி.எப். வீரர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உரிய ஓய்வு, பாதுகாப்பு, தடுப்பு உபகரணங்கள், இயல்பான மன நிலையில் பணிபுரிய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x