Last Updated : 31 May, 2020 05:34 PM

 

Published : 31 May 2020 05:34 PM
Last Updated : 31 May 2020 05:34 PM

கேரளா வழியாக வரும் தமிழகப் பயணிகள் குடும்பத்துடன் நடுவழியில் தவிப்பு; உதவிடுமாறு குமரி எம்.பி., எம்எல்ஏ.,க்கள் வலியுறுத்தல்

கேரளா வழியாக குமரி வரும் தமிழகப் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்படுவதால் குடும்பத்துடன் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், சுரேஷ்ராஜன், விஜயதரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் வலியுறுத்தினர்.

குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்த அவர்கள், கரோனா ஊரடங்கிற்கு மத்தியில் தமிழகத்தின் பிற பகுதிகள், பிற மாநிலம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழக மக்கள் கேரளா வழியாக குமரி மாவட்டம் வருகின்றனர்.

அவர்கள் இ பாஸ் போன்றவை இல்லாததால் களியக்காவிளை எல்லை பகுதியில் நடு வழியில் இறக்கி விடப்படுகின்றனர். இதனால் குடும்பம், குழந்தைகளுடன் இரவு பகலாக சாலையோரம் தவிக்க நேரிடுகிறது.

இதை தவிர்த்து அவர்கள் சிரமமின்றி ஊர் வந்து சேர்வதற்கு உதவிடும் வகையில் திருவனந்தபுரம் விமான நிலையம், ரயில் நிலையங்களில் தமிழக அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும்.

மேலும் கரோனா நேரத்தில் தொகுதி சார்ந்த பிரச்சினைக்காக எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அழைப்பை புறக்கணிக்கின்றனர்.

இந்த போக்கை மாற்றவேண்டும் என வலியுறுத்தினர். இவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x