ஊரடங்கால் இலங்கையில் தவித்த 176 பேர் இந்தியாவுக்கு திரும்பினர்- மேலும் 700 பேர் நாளை கப்பலில் புறப்பாடு

ஊரடங்கால் இலங்கையில் தவித்த 176 பேர் இந்தியாவுக்கு திரும்பினர்- மேலும் 700 பேர் நாளை கப்பலில் புறப்பாடு
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் வெளிநாடு களில் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் சமுத்திர சேது என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.

இதன் மூலம் இந்திய போர்க் கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா மூலம், கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கு 700 இந்தியர்கள் நாளை அழைத்து வரப்படுகின்றனர். முதற்கட்டமாக 176 பேர் விமானம் மூலம் கொழும்பில் இருந்து மும்பை, புவனேஸ்வர், கொல்கத்தாவுக்கு நேற்று புறப்பட்டனர். இதுகுறித்து இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே கூறுகையில், இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline மூலம் இந்தியா திரும்பிவரப் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

இந்த கப்பலில் தென்மாவட்டங் களைச் சேர்ந்தவர்களே அதிகம் வருவர் என்பதால், அவர்களை சொந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பவும், கரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எஸ். முஹம்மது ராஃபி
தாயகம் திரும்ப கொழும்பு விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in